செய்திகள்

பிரபல மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்

DIN

கண்ணூர்: பிரபல மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி (98) கேரள மாநிலம் கண்ணூரில் புதன்கிழமை காலமானார். தமிழில் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', "பம்மல் கே. சம்பந்தம்', "சந்திரமுகி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 1996-ஆம் ஆண்டு மலையாளத் திரையுலகில் பயணத்தைத் தொடங்கிய அவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார்.

அண்மையில் கரோனா தொற்றில் இருந்து விடுபட்ட அவர், கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். "தென்னிந்திய திரையுலகின் தாத்தாவாக அறியப்பட்டவர் நம்பூதிரி' என்று சென்னிதலா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: இரவு 7 மணிக்கு பாஜக ஆலோசனை

மோடி தலைமையில் இரவு 7 மணிக்கு பாஜக ஆலோசனை

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

கர்நாடகத்தில் பாஜக 16, காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் முன்னிலை!

இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

SCROLL FOR NEXT