செய்திகள்

அசுரன் தெலுங்கு ரீமேக்: திரையரங்குகளில் மே 14-ல் வெளியீடு

தனுஷ் வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ளார்.

DIN

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நரப்பா, மே 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்தது. இப்படத்தை தாணு தயாரித்தார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்தார். 2019 அக்டோபர் 4 அன்று வெளியான அசுரன் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. 

அசுரன் படம் தெலுங்கில் நரப்பா என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. தெலுங்கு அசுரனை தாணுவும் சுரேஷ் பாபுவும் தயாரித்துள்ளார்கள். ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கியுள்ளார். தனுஷ் வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ளார். இது அவருடைய 74-வது படம். தமிழில் மஞ்சு வாரியர் நடித்த வேடத்துக்கு தமிழ் நடிகை ப்ரியாமணி தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் அசுரன் தெலுங்கு ரீமேக்கான நரப்பா, மே 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு இன்று அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT