செய்திகள்

'நாக்க முக்க' பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடிய ஸ்ரீதேவி மகள்

DIN

விஜய் ஆண்டனியின் 'காதலில் விழுந்தேன்' படத்தில் இருந்து நாக்க முக்க பாடலுக்கு நடனமாடிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

விஜய் ஆண்டனியின் இசையில்  'காதலில் விழுந்தேன்' படத்தில் இடம் பெற்ற நாக்க முக்க பாடல் உலக அளவில் பிரபலம். யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் பிரபலமாகாத காலத்திலேயே இந்த பாடல் உலக அளவில் அனைவராலும் கொண்டாடப்பட்டது. இந்த பாடல் கடந்த 2011 ஆம் வருடம் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது ஒலிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அளவில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு திரையுலக பிரபலங்களும், நாக்க முக்க பாடலுக்கு நடனமாடும் விடியோவை பகிர்ந்து வருகின்றனர். அந்த
வகையில் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக்க முக்க பாடலுக்கு நடனமாடும் விடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவரது நடனத்தைப் பாராட்டி வருகின்றனர். 

மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ், ரகுல் ப்ரீத் சிங், அர்ஜூன் கபூர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது நடனத்துக்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ஜான்வி கபூர், தனது தந்தை போனி கபூர் தயாரிப்பில் அஜித்குமார் நடித்து வரும் 'வலிமை' பட முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்திருந்தார். இதற்கு அஜித் ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் கடற்கரையில் இருக்கும் அவரது புகைப்படங்கள் பெரிதும் வரவேற்பை பெற்று வருகின்றன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT