மகளுடன் நடிகை ஸ்ரீதேவி 
செய்திகள்

நடிகை ஸ்ரீதேவியின் மகளைப் பார்த்துள்ளீர்களா ?

நடிகை ஸ்ரீதேவி தனது மகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

DIN

நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியினரின் மகள் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக 'ரிக்சா மாமா' படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர், தொடர்ந்து 'அம்மா வந்தாச்சு', 'ஆவாரம் பூ' போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தினார். 

பின்னர் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக 'காதல் வைரஸ்' மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, 'பிரியமான தோழி', 'தித்திக்குதே', 'தேவதையைக் கண்டேன்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். ' கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பரை திருமணம் செய்துகொண்டவருக்கு ரூபிகா என்ற பெண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதற்கு  ரசிகர்கள், ஸ்ரீதேவி சிறுவயதில் உள்ளது போல், தோற்றமளிப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கு அப்படி தோன்றுகிறதா ?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி: தொடர் தொல்லை அளிக்கும் அமைச்சர்! பெண் எம்எல்ஏ பரபரப்பு புகார்

மணிப்பூர் செல்கிறாரா பிரதமர் மோடி?

கொலைகள் ஒப்பீடு! தில்லியைவிட சிகாகோவில் 15 மடங்கு அதிகம்!

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

சொல்லப் போனால்... சுதேசி கொள்கையும் ஏற்றுமதிச் சிக்கல்களும்

SCROLL FOR NEXT