செய்திகள்

விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் படம்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு படம் சோனி லைவ் ஓடிடியில் நேரடியாக வெளியானதையடுத்து...

DIN

பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பூமிகா என்கிற படத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இது அவருடைய 25-வது படம். 

2010-ல் நீதானா அவன் படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர், ஐஸ்வர்யா ராஜேஷ். 2015-ல் வெளியான காக்கா முட்டை படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு ஒவ்வொரு வருடம் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

பூமிகா படத்தை ரதிந்திரன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு - ராபர்ட், இசை - ப்ரித்வி சந்திரசேகர். இதற்கு முன்பு அஸ்வின், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இது வேதாளம் சொல்லும் கதை என்கிற படத்தை ரதிந்திரன் இயக்கியுள்ளார். 

இந்நிலையில் பூமிகா படம் ஆகஸ்ட் 22 அன்று மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு படம் சோனி லைவ் ஓடிடியில் நேரடியாக வெளியானதையடுத்து அவர் கதாநாயகியாக நடித்த மற்றொரு படமான பூமிகாவும் திரையரங்குகளில் நேரடியாக வெளியாகாமல் மாற்று வழியைக் கண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம்! - முதல்வர் ஸ்டாலின்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: அமைச்சர் பதவி விலகக் கோரி பாஜக போராட்டம்!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்! | செய்திகள் : சில வரிகளில் | 3.2.26

மேன்கைண்ட் பார்மா லாபம் ரூ.414 கோடியாக அதிகரிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்!

SCROLL FOR NEXT