செய்திகள்

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு இளம் ஹீரோ: இயக்குநரின் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் 'விக்ரம்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, 'சர்கார்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கிரிஷ் கங்காதரன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கியது. படப்பிடிப்பில் விஜய் சேதுபதியும் ஃபகத் ஃபாசிலும் கலந்துகொண்டார்கள். 

இந்தப் படத்தில் கமல்ஹாசனின் மகனாக ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த நிலையில் இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சுட்டுரைப் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார். 

நடிகர் கமல்ஹாசனுடன் ஜெயராம் இணைந்து தெனாலி, பஞ்சதந்திரம், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் காளிதாஸ் கதாநாயகனாக நடித்த மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் நடிகர் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் 'பாவக் கதைகள்' தொடரில் சுதா கொங்கரா இயக்கத்தில் 'தங்கம்' படத்தில் திருநங்கையாக நடித்திருந்த காளிதாஸ் ஜெயராமின் நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ஒரே படத்தில் திறமையான கலைஞர்கள் இணைந்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாரம்பரிய உணவுகளுடன் உணவுத் திருவிழா: நாளை தொடக்கம்! முழு விவரம்!

Middle Class Movie Review | கோடீஸ்வரர் ஆனாரா மிடில் கிளாஸ்? - திரை விமர்சனம் | MunishKanth

மதுரையின் வளர்ச்சிக்கு எதிரான தடைகளைத் தகர்த்தெறிவோம்! - முதல்வர் ஸ்டாலின்

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டும் மாநாடு: பிரேமலதா

சென்னையில் 2 மாதங்களுக்குள் வருகிறது டபுள் டக்கர் பேருந்து?

SCROLL FOR NEXT