செய்திகள்

திரையரங்குகளில் வெளியாகும் மரைக்காயர்: வெளியீட்டுத் தேதியை அறிவித்தார் மோகன்லால்

2019-ம் ஆண்டிற்கான சிறந்த தேசிய திரைப்படமாக மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிம்ஹம் படம் தோ்வு செய்யப்பட்டது.

DIN

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கிய மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிம்ஹம் என்கிற மலையாளப் படத்தில் மோகன்லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். (இந்தப் படம் தமிழில், மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் என்கிற பெயரில் வெளிவருகிறது.)

2019-ம் ஆண்டிற்கான சிறந்த தேசிய திரைப்படமாக மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிம்ஹம் படம் தோ்வு செய்யப்பட்டது. சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஆடை வடிவமைப்பு என மொத்த மூன்று தேசிய விருதுகளை அள்ளியது.

மரைக்காயர் படம் முதலில் 2020, மார்ச் 26 அன்று வெளியாகவிருந்தது. எனினும் கரோனா பரவல் காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு ஆகஸ்ட் 12 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பிறகு கரோனா சூழல் காரணமாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

எனினும் மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிம்ஹம் படம் திரையரங்குகளில் ஏற்கெனவே திட்டமிட்ட தேதியில் வெளியாகும் என மோகன்லால் அறிவித்துள்ளார். ஓணம் வெளியீடாக ஆகஸ்ட் 12 அன்று திரையரங்குகளில் மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிம்ஹம் படம் வெளியாகும் என ட்வீட் செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெரு நாய் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு நாடகம்! மேடையில் நடிகரை கடித்த தெருநாய்! | Kerala

இபிஎஸ்ஸுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை!

ராமதாஸ் இன்று வீடு திரும்புகிறார்: கமல்ஹாசன் தகவல்!

எச்சரிக்கை! இளம்பெண்களை அச்சுறுத்தும் சைபர் புல்லிங் தாக்குதல்!

கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்! மரத்தைப் பிடித்து தப்பித்தவர்! | Philippines

SCROLL FOR NEXT