பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை சிவன் காலமானார். அவருக்கு வயது 89.
சந்தோஷ் சிவனின் தந்தை சிவன், திரையுலகில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றியவர். திருவனந்தபுரத்தில் சிவன் ஸ்டூடியோவை உருவாக்கினார். செம்மீன் படத்தில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார். மூன்று முறை தேசிய விருதை வென்றுள்ளார். ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார். இவருடைய மகன்கள் சந்தோஷ் சிவன், சங்கீத் சிவன், சஞ்சீவ் சிவன் ஆகிய மூவரும் திரையுலகில் பணியாற்றி வருகிறார்கள்.
திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் கால் இடறி கீழே விழுந்தார். பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சிவனின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.