செய்திகள்

210 மில்லியன் பார்வைகள்: மாஸ்டர் படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடல் சாதனை!

விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் யூ ட்யூபில் 210 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 

DIN

விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் யூ ட்யூபில் 210 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 

பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ஜனவரி 13 அன்று பொங்கலுக்கு வெளியானது.

இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்திருந்தனர். 

தெலுங்கு, ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டிருந்த இந்த படம் நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது. எனினும் திரையரங்குகளில் வெளியான 16 நாள்களில் அமேசான் பிரைம் ஓடிடியில் படம் வெளியானது. 

இந்த படத்தில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதிலும் குறிப்பாக 'வாத்தி கம்மிங்' பாடல் தற்போது யூ ட்யூபில் 210 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 

இந்த பாடலுக்கு இசை அனிருத். கானா பாலச்சந்தர் இந்த பாடலை எழுதியிருந்தார். அனிருத், கானா பாலச்சந்தர் இருவரும் இந்த பாடலை பாடியிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT