மே 13-ல் திரையரங்குகளில் வெளியாகும் சல்மான் கானின் ராதே படம்!
ராதே படம் கடந்த மே மாதம் வெளிவருவதாக இருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
செய்திகள்மே 13-ல் திரையரங்குகளில் வெளியாகும் சல்மான் கானின் ராதே படம்!
ராதே படம் கடந்த மே மாதம் வெளிவருவதாக இருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கியுள்ள படம் - ராதே.
சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராப், ரன்தீப் ஹூடா போன்றோர் நடித்துள்ளார்கள்.
10 வருடங்களுக்கு முன்பு, வாண்டட் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலமாக சல்மான் கானும் பிரபுதேவாவும் முதல்முதலாக இணைந்தார்கள். அது பிரபுதேவா இயக்கிய முதல் ஹிந்திப் படம். இந்தக் கூட்டணியின் உருவாக்கத்தில் தபாங் 3 வெளியானது. அடுத்ததாக ராதே படத்தில் இருவரும் 3-வது முறையாக இணைந்துள்ளார்கள்.
ராதே படம் கடந்த மே மாதம் வெளிவருவதாக இருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
சமீபகாலமாக பிரபல நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியாவதால் ராதே படமும் ஓடிடியில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால் ராதே படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகும் என சல்மான் கான் அறிவித்தார்.
இந்நிலையில் ராதே படம் திரையரங்குகளில் மே 13 அன்று வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்புடன் படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.