செய்திகள்

பிக்பாஸ் புகழ் ரைசாவின் காதலர் இவரா?: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

DIN

சென்னை: பிக்பாஸ் புகழ் ரைசாவின்  காதலர் இவர்தான் எனக் குறிப்பிட்டு இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது.

நடிகர் கமல் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றுப் பிரபலமானவர் நடிகை ரைசா. அதற்கு முன்னதாக தனுஷின் ’வேலையில்லா பட்டதாரி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரைசா ஒரு மாடலும் கூட.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் குவிந்தது. குறிப்பாக ஹரிஷ் கல்யாணுடன் இவர் நடித்த ’பியார் பிரேமா காதல்’ படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்சமயம் அவர் சில படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

பொதுவாகவே சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி  வரும் ரைசா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருபவர்.

இந்நிலையில் பிக்பாஸ் புகழ் ரைசாவின்  காதலர் இவர்தான் எனக் குறிப்பிட்டு இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது.

ரைசாவின் அந்தப்புகைப்படத்தில் ஒருவர் மடியில் ரைசா உட்கார்ந்துக் கொண்டு நெருக்கமாக இருக்கிறார். பார்ப்பதற்கு வெளிநாட்டை நேர்ந்தவர் போலிருக்கும் அவர்தான் ரைசாவின் காதலர் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்துக் கூறி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT