செய்திகள்

வாவ்..என்ன ஒரு பாட்டு!: புகழ்ந்து தள்ளிய செல்வராகவன்

DIN

சென்னை: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், அவரது மகள் தீ மற்றும் அறிவு ஆகிய இருவரும் பாடி நடித்த 'என்ஜாய் எஞ்சாமி' என்கிற பாடலை  இயக்குநர்  செல்வராகவன்  வெகுவாகப்பு கழ்ந்துளார்.

ரெளடி பேபி பாடலின் மூலம் புகழை அடைந்தவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணைன் மகளான தீ, ‘என்ஜாய் எஞ்சாமி’ என்கிற சுயாதீனப் பாடலினால் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தீ, அறிவு ஆகிய இருவரும் பாடி நடித்த 'என்ஜாய் எஞ்சாமி' என்கிற பாடலின் விடியோ சமீபத்தில் யூடியூபில் வெளியானது. பாடலை அறிவு எழுதியுள்ளார். சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளம் இப்பாடலைத் தயாரித்துள்ளது. அமித் கிருஷ்ணன் பாடலைப் படமாக்கியுள்ளார்.

யூடியூப் தளங்களில் வழக்கமாக திரைப்படப் பாடல்களுக்குக் கிடைக்கும் அமோக வரவேற்பை சுயாதீனப் பாடலான என்ஜாய் எஞ்சாமி பெற்றுள்ளது. இயற்கை வளத்தையும் கலாசார வேர்களையும் போற்றும் இப்பாடலின் படமாக்கம், ஆங்கிலப் பாடல்களுக்கு இணையாக உள்ளதால் இதற்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகமாகி வருகிறது. மார்ச் 7 அன்று யூடியூபில் வெளியான இப்பாடலுக்கு ஐந்தே நாள்களில் 8.7 மில்லியன் (87.50 லட்சம்) பார்வைகள் கிடைத்துள்ளன. ஒரு சுயாதீனப் பாடல், திரைப்பாடலுக்கு இணையாக அல்லது அதைவிடவும் அதிகமான வரவேற்பைப் பெற்றிருப்பது தமிழ்த் திரையிசை வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுயாதீனப் பாடல்களில் என்ஜாய் எஞ்சாமி ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளதாகவே சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் 'என்ஜாய் எஞ்சாமி' என்கிற பாடலை  இயக்குநர்  செல்வராகவன்  வெகுவாகப்பு கழ்ந்துளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில். '‘என்ஜாய் எஞ்சாமி’ என்ன ஒரு பாட்டு! இப்பாடல் உருவாக்கமும் மிகவும் பிடித்திருந்தது. தீ, அறிவு மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்' எனப்  பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT