சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது ரஜினியின் 'அண்ணாத்த', விஜய் மற்றும் சூர்யா ஆகியோரின் புதிய படங்களைத் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி: நடிக்க உள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதன் மாலை சிறிய விடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் இந்தப்படத்தில் பணிபுரிவோர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்தினை பொன்ராம் இயக்கவுள்ளார். இவர் முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.
முதன்முறையாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் விஜய் சேதுபதி இணைய உள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.