காதல் படத்தில் விருச்சிககாந்த் 
செய்திகள்

‘காதல்’ படப் புகழ் விருச்சிககாந்த் காலமானார்

நடிச்சா ஹீரோ சார்... நான் வெயிட் பண்றேன் சார்... அப்புறம் சி.எம்., அப்புறம் டெல்லி... இதுபோதும் சார்...

DIN

காதல் படத்தில் சிறிய வேடத்தில் நடித்துப் புகழ் பெற்ற விருச்சிககாந்த் காலமானார்.

2004-ல் வெளியான பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து புகழ் பெற்றார் விருச்சிககாந்த். அவருடைய இயற்பெயர், பாலாஜி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். காதல் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவரை அழைத்து நடிக்க வைத்தார் பாலாஜி சக்திவேல். நடிச்சா ஹீரோ சார்... நான் வெயிட் பண்றேன் சார்... அப்புறம் சி.எம்., அப்புறம் டெல்லி... இதுபோதும் சார்... என்று அவர் பேசிய வசனம் தனி அடையாளத்தை அளித்தது. பிறகு விகடகவி, தூங்காநகரம், வேட்டைக்காரன் போன்ற படங்களிலும் நடித்தார். பெற்றோர் இறந்த பிறகு நடிப்பில் ஈடுபட ஆர்வம் இல்லாமல் இருந்தார்.

சென்னை சூளையில் நடைபாதையில் வசித்து வந்த விருச்சிககாந்த், அதே பகுதியில் உள்ள ஆட்டோவில் தூங்கி வந்தார். இந்நிலையில் ஆட்டோவிலேயே உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் எப்படி உயிரிழந்தார் என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

25 மாநிலங்களில் உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை!

உலக ஒற்றுமைக்கான மினி மாரத்தான் ஓட்டம்

வாக்கு திருட்டு விவகாரம்: சிறுபான்மை பிரிவு காங்கிரஸ் சாா்பில் கையொப்ப இயக்கம்!

ஏா் இந்தியா விமானத்தில் திடீரென செயல்பட்ட அவசரகால அமைப்பு: பாதுகாப்பாகத் தரையிறக்கம்

விவசாய நிலத்தில் இறங்கி மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT