வைபவ் நடிக்கும் பபூன் என்கிற படத்தைத் தயாரிக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இதற்கு அடுத்ததாக விக்ரம், துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். இது விக்ரமின் 60-வது படம்.
இந்நிலையில் வைபவ் நடிப்பில் பபூன் என்கிற படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. அசோக் வீரப்பன் இயக்கும் இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன். கதாநாயகியாக அனகா தேர்வாகியுள்ளார். கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் போன்றோர் தயாரிக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.