செய்திகள்

''அவங்க என்ன மதிக்கல'' - விஜய் டிவி தொடரில் இருந்து விலகியது குறித்து அதிர்ச்சியளித்த நடிகை

விஜய் டிவி தொடரில் இருந்து விலகியது குறித்து பிரபல நடிகை உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

DIN

விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. அதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி தொடரில் நடித்தார். 

சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாம் பாகத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்னர் ஜி தமிழ் தொடர்களில் நடித்துவந்தார். தற்போது  விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடித்து வந்தார். . அந்த தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இதனிடையே கடந்த மாதம் 'ரங்கநாயகா' என்ற கன்னட படத்தில் கதாநாயகியாக நடித்து வருவதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் பகிரிந்திருந்தார். இதனையடுத்து அவர் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இருந்து விலகப்போவதாக தகவல் பரவி வந்தது. 

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இனி நான் இல்லை என்பது உங்களில் பலருக்கு ஏமாற்றம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் எனது சூழ்நிலையும் புரிந்து எனது முடிவை ஏற்றுக்கொள்ளும்படி உங்களைக் கேட்கிறேன். 

உங்களுக்கு ஏமாற்றம் தந்ததற்கு மன்னித்து விடுங்கள். கண்டிப்பாக எனக்கு வருத்தம் தான். ஆனால் பல நேரங்களில் மதிப்பற்றவளாக நான் உணர்ந்தேன். இனி எனது இருப்பு தொடருக்குத் தேவையில்லை என்று நினைத்தேன். மேலும் நான் இருக்கிறேனோ, இல்லையோ அதனால் அவர்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை என்பதை உணர்ந்தததால் தான் இந்த முடிவெடுத்தேன். 

ஆம் எப்படியும் அது கற்பனைக் கதாப்பாத்திரம் தான். எனவே, பெரிதாக நினைக்க வேண்டாம்.  நமக்கிருக்கும் மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவோம். மேலும் நிகழ்ச்சி எப்படியும் தொடர வேண்டும். எனவே என்றும்போல நாம் இருவர் நமக்கு இருவர் தொடருக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT