செய்திகள்

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க நினைவஞ்சலி

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தினார். 

DIN

சமீபத்தில் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். இளம் வயதில் அவர் மரமடைந்தது அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பல்வேறு மொழி பிரபலங்களும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சில நாட்களுக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது சகோதரர் சிவ ராஜ்குமாரை சந்தித்து ஆறுதல் கூறினார். 

இந்த நிலையில் நடிகர் சூர்யா புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அப்போது புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவ ராஜ்குமார் உடன் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, தனது குடும்பத்துக்கும், நடிகர் ராஜ்குமார் குடும்பத்துக்கும் நல்ல உறவு இருந்ததாகவும் புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியை கேட்டு தங்கள் குடும்பத்தினர் மிகுந்த துயருற்றறதாகவும் தெரிவித்தார். மேலும் நம் மனதில் என்றும் புனித் ராஜ்குமார் இருப்பார் என்றும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அலுவலக குத்தகை 2 கோடி சதுர அடியாகக் குறைவு

ரூ.1,700 கோடிக்கு பங்கு வெளியீடு: லலிதா ஜுவல்லரிக்கு செபி ஒப்புதல்

புன்னைநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை

அக்.22-இல் குடியரசுத் தலைவா் சபரிமலை பயணம்

ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT