நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெறவில்லையென்றாலும், ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது. இந்தப் படத்துக்கு முதல் நாளில் ரூ.48 கோடி வசூல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலான திரையரங்குகளில் எல்லாம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அண்ணாத்த படத்தை நடிகை ஷாலின் தனது மகன் ஆத்விக்குடன் கண்டுகளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் அவருடன் படம் எடுத்துக்கொண்டு அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் வரும் காட்சிகளில் எல்லாம் ஷாலினி, தலைவா என்று கத்தியபடி படம் பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | காதலருடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்: வெளியான புகைப்படம் வைரல்
அண்ணன் - தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அண்ணன் - தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இருவருக்கும் இடையேயான காட்சிகள் குடும்ப பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.