முகப்பு
செய்திகள்

மோகன்லாலின் 'மரைக்காயர்' படத்தில் நடிகர் அஜித்?: படக்குழு வெளியிட்ட விடியோவால் ரசிகர்கள் ஆச்சரியம்

மோகன்லாலின் மரைக்காயர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் அஜித் சென்றுள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் தற்போது மரைக்காயர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மோகன்லாலின் மகன் பிரனவ் மோகன்லாலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் அர்ஜூன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பரியதர்ஷன், ஃபாசில், சித்திக், மறைந்த நடிகர் நெடுமுடி வேணு, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் அஜித் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட விடியோவை தயாரிப்பு நிறுவனமான சுனைனா மூவிஸ் நிறுவனம் யூடியூபில் வெளியிட்டுள்ளது. அந்த விடியோவில் நடிகர்கள் சுனில் ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினரிடம் நடிகர் அஜித் நலம் விசாரிக்கிறார். பின்னர் மோகன்லாலுடன் கலந்துரையாடுகிறார். அப்போது வீரம், மங்காத்தா படங்களின் இசை பின்னணியில் ஒலிக்கிறது. இந்த விடியோ எப்பொது எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவல் இல்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →