செய்திகள்

கரோனாவை வென்று மீண்டும் 'ரோஜா' தொடரில் களமிறங்கும் நடிகை

கொரோனாவில் இருந்து மீண்டு ரோஜா தொடரில் நடித்து வருவதாக நடிகை தகவல்

DIN

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம். இதன் காரணமாக டிஆர்பி ரேட்டிங்கில் எப்பொழுதும் முதல் 3 இடங்களில் ரோஜா தொடர் இடம்பெற்று வருகிறது. இந்தத் தொடரில் நடிக்கும் நடிகர்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. 

செண்பகம் மற்றும் ரோஜா குறித்த உண்மைகள் ரசிகர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. ரோஜா தொடரின் முக்கிய திருப்பமாக கருதப்பட்டது நடந்து விட்டதால் தொடர் விரைவில் முடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர் முடிக்கப்படாது என்று சீரியல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்த சீரியலில் அனுவாக நடித்துவந்த விஜே அக்ஷயா சில வாரங்களுக்கு முன் தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் தனக்கு தீவிர பாதிப்பு இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் ரோஜா தொடரில் நடித்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT