செய்திகள்

ரூ. 200 கோடியைத் தொடுமா?: வசூல் விவரத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்

முதல் 12 நாள்களில் இந்தியாவில் ரூ. 160 கோடி வசூலை எட்டியதாக அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சிம்பா என்கிற சூப்பர் ஹிட் படத்துக்கு அக்‌ஷய் குமார் நடிப்பில் சூர்யவன்ஷி என்கிற படத்தை இயக்கியுள்ளார் பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி. கரண் ஜோஹர் இணைத் தயாரிப்பாளர். கத்ரினா கயிப், ஜாக்கி ஷெராப் போன்றோரும் நடித்துள்ளார்கள். அஜய் தேவ்கனும் ரன்வீர் சிங்கும் கெளரவ வேடங்களில் நடித்துள்ளார்கள். சூர்யவன்ஷி படம் கடந்த தீபாவளி அன்று வெளிவருவதாக இருந்தது. கரோனா பரவல் காரணமாக அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி 5 நாள்களில் இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலை எட்டியது. ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் கடைசியாக வெளியான 9 படங்களும் குறைந்தது ரூ. 100 கோடி வசூலை எட்டியுள்ளன. சூர்யவன்ஷி படமும் இந்தப் பட்டியலில் இணைந்ததால் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் ரோஹித் ஷெட்டி. 

இந்நிலையில் சூர்யவன்ஷி படத்தின் சமீபத்திய வசூல் விவரத்தை வெளியிட்டுள்ளார் கரண் ஜோஹர். முதல் 12 நாள்களில் இந்தியாவில் ரூ. 160 கோடி வசூலை எட்டியதாக அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் இதன் வசூல் ரூ. 50 கோடியைத் தாண்டி விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வார இறுதிக்குள் சூர்யவன்ஷி படத்தின்  வசூல் ரூ. 175 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் ஷெட்டி இயக்கிய சென்னை எக்ஸ்பிரஸ், கோல்மால் அகைன், சிம்பா ஆகிய படங்களின் வசூல் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக இருந்தன. சூர்யவன்ஷி படமும் ரூ. 200 கோடி வசூலை அடைந்து அப்படங்களின் வரிசையில் இடம்பெறுமா என்பது இனிமேல் தான் தெரியவரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT