செய்திகள்

கோல்டன் விசா பெற்ற முதல் இந்திய நடிகை: லெஜண்ட் சரவணா பட கதாநாயகிக்கு கிடைத்த கௌரவம்

DIN

கோல்டன் விசா பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை லெஜண்ட் சரவணா பட கதாநாயகி ஊர்வசி ராவ்துலா பெற்றுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசாவை அந்த அரசு அறிமுகம் செய்திருந்தது.  இந்த விசா புதுப்பித்துக்கொள்ளும் வசதி கொண்டது. 

இந்த கோல்டன் விசாவை நடிகர்கள் ஷாரூக்கான், சஞ்சய் தத், மோகன்லால், மம்முட்டி, டோவினா தாமஸ், பிருத்விராஜ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்சா ஆகியோருக்கு வழங்கியுள்ளது. 

இந்த நிலையில் தற்போது கோல்டன் விசாவானது நடிகை ஊர்வசி ராவ்துலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விசாவை பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை ஊர்வசி ராவ்துலா பெற்றுள்ளார். ஊர்வசி ராவ்துலா தற்போது லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஜேடி ஜெர்ரி இயக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT