'அண்ணாத்த’ முதல் பாடல் இன்று வெளியீடு 
செய்திகள்

'அண்ணாத்த’ முதல் பாடல் இன்று வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த’ திரைப்படத்தில் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடலை இன்று (அக்-4) மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

DIN

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த’ திரைப்படத்தில் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடலை இன்று (அக்-4) மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விஸ்வாசம் படத்திற்கு பின்  இயக்குநர் சிவா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் இப்படத்தை இயக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன் ’அண்ணாத்த’ முதல் பார்வை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை அடைந்த நிலையில் இப்படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் இன்று அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு, நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT