செய்திகள்

விடியோ: ''ஒவ்வொரு வீட்டில் இருந்தும் எங்களை விரட்டினார்கள்'' - பிக்பாஸ் வீட்டில் இசைவாணி உருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கையின் கடினமான காலக்கட்டத்தை ரசிகர்களுடன் பாடகி இசைவாணி பகிர்ந்துகொண்டார்.

DIN

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த முறையைப் போல் அல்லாமல் இந்த முறை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மக்களுக்கு பெரிதும் பரீட்சையமில்லாதவர்கள். 

இந்த நிலையில் இரண்டாம் நாளான இன்று (அக்டோபர் 5) புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது. ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களைப் பற்றிய உணர்வுப்பூர்வமான கதைகளை தெரிவிப்பார்கள்.

அந்த வகையில் போட்டியாளர்கள் முன்பு பாடகி இசைவாணி பேசுகிறார். அப்போது, என்னுடைய அப்பா துறைமுகத்தில் வேலை செய்கிறார். போதிய ஊதியம் இல்லாததால் எங்களால் வாடகை கொடுக்க முடியவில்லை. அதனால் நாங்கள் குடியிருந்த ஒவ்வொரு வீட்டில் இருந்தும் எங்களை விரட்டினார்கள். எனக்கு நிறைய நல்ல உடைகள் உடுத்த வேண்டும் என்ற ஆசை. ஆனால் போட்டுக்கொள்ள கூட நல்ல உடை இருக்காது. 

ஒரு வேளை சாப்பாடு தான் இருக்கும். அதனையும் என்னுடைய அப்பா நான் சாப்பிட வேண்டும் என்று சாப்பிடாமல் விட்டுவிடுவார். ஆனால் கஷ்டப்படுறோம் என்று நினைக்காதீர்கள். நம் வாழ்க்கை ஒருநாள் மாறும். என்கிறார். அவரின் பேச்சைக் கேட்டவுடன் போட்டியாளர்கள் கண்கலங்குகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT