முகப்பு
செய்திகள்

சூர்யாவின் படத்தை 18 வயதிற்குட்பட்டவர்கள் பார்க்க முடியாதா ?: அதிகாரப்பூர்வ தகவல்

சூர்யாவின் ஜெய் பீம் படத்துக்கு தணிக்கைத் துறை ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:

சூர்யாவின் ஜெய் பீம் படத்துக்கு தணிக்கைத் துறை ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 

சூர்யா - ஜோதிகா இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படத்தில் மணிகண்டன், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்னைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குநர் ஞானவேல் இயக்கியுள்ளார். 

இந்த நிலையில், இந்தப் படத்துக்கு தணிக்கைத் துறை ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்தப்படம் 2 மணி நேரம் 44 நிமிடம் ஓடக்கூடியது. ஏற்கனவே சூர்யாவின் நந்தா, ரத்த சரித்திரம் ஆகிய படங்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →