பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமிதா மாரிமுத்து பாதியில் விலகியதாக தகவல் பரவி வருகிறது.
இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமிதா மாரிமுத்து என்ற திருநங்கை கலந்துகொண்டிருந்தார். இதனையடுத்து மற்ற தொலைக்காட்சிகளுக்கு விஜய் டிவி முன்னுதாரணமாக திகழ்வதாக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசிய நமிதா, சமுதாயத்தில் திருநங்கைகளை பாலியல் தொழிலாளியாகவும், பிச்சை எடுப்பவர்களாகவும் பார்க்கிறார்கள். எல்லோரும் என்னை மாறுங்கள் என்கிறார்கள். முதலில் நீங்கள் மாறுங்கள். நாங்கள் எப்போதோ மாறிவிட்டோம் என்று கண்ணீர் விட்டு அழுதார். இதனையடுத்து பார்வையாளர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகியது.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 9) வெளியான ப்ரமோவில் நமிதா இல்லை. நமிதாவினால் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார் என்றும், நமிதாவின் உடல்நிலை பிரச்னை காரணமாக வெளியேறிவிட்டதாகவும் இருவேறு தகவல்கள் பரவுகின்றன. இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.