செய்திகள்

நமீதா மாரிமுத்து எங்கே ? : வெளியான பிக்பாஸ் ப்ரமோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

DIN

பிக்பாஸ் புதிய ப்ரமோவில் நமிதா இல்லாதது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 

பிக்பாஸ் சீசன் 5 ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகத் துவங்கியது. நடிகர் கமல்ஹாசன் தனக்கே உரிய பாணியில் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார். துவக்கத்தில் நிகழ்ச்சியின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் குறைவாக இருந்ததாகவே தெரிகிறது. 

தற்போது போட்டியாளர்களிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட நிகழ்ச்சி விறுவிறுப்பாக மாறத் துவங்கியுள்ளது. கடந்த வாரம் பெரும்பாலும் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவே நேரம் சரியாக இருந்திருக்கும். 

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல்ஹாசன் போட்டியாளர்களுக்கு இடையே உரையாடுவார். வெளியேறும் போட்டியாளர்களை அறிவிப்பார். பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார். முதல் வாரம் என்பதால் இந்த வாரம் போட்டியாளர்கள் யாரும் வெளியேற மாட்டார்கள்.

இதனையடுத்து இந்த வாரம் போட்டியாளர்கள் முன் தோன்றும் கமல்ஹாசன் என்ன பிரச்னைகளை பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் போட்டியாளர்கள் குறித்து பேசும்போது அரசியல் கருத்துக்களை தெரிவிப்பதும் கமல்ஹாசனின் வழக்கம்.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் பேசும் கமல்ஹசான், வெற்றிக்கு ஒரே சூத்திரம் தான். தடைகளை வென்று முன்னேறுவது. வெற்றி இறுதி இலக்கல்ல. தொடர் நிகழ்வு தான் வெற்றி. இவர்கள் தொடர்ந்து முன்னேறுகிறார்களா ? பார்க்கலாம் என்று பேசுகிறார்.

இந்த ப்ரமோவில் போட்டியாளர்கள் அனைவரும் இருக்கிறார்கள். ஆனால் நமிதா மட்டும் அங்கில்லை. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அவர் தயாராக தாமதமாகியிருக்கலாம். எனினும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டாலே இதுகுறித்து தெரிய வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT