செய்திகள்

கலகலப்பு 2க்கு பிறகு பிரபல இயக்குநர் படத்தில் மீண்டும் இணையும் ஜீவா - சிவா

கலகலப்பு 2 படத்துக்கு பிறகு பிரபல இயக்குநர் பொன் குமரன் இயக்கும் படத்தில் ஜீவா மற்றும் சிவா இணைந்து நடிக்கவுள்ளனர்.  

DIN

'கலகலப்பு 2' படத்துக்கு பிறகு பிரபல இயக்குநர் பொன் குமரன் இயக்கும் படத்தில் ஜீவா மற்றும் சிவா இணைந்து நடிக்கவுள்ளனர். 

நடிகர் ஜீவாவும், சிவாவும் இணைந்து சுந்தர்.சி இயக்கத்தில் 'கலகலப்பு 2' படத்தில் நடித்திருந்தனர். இதனையடுத்து மீண்டும் இருவரும் 'கோல்மால்' என்ற படத்துக்காக இணையவுள்ளனர். இந்தப் படத்தை பொன் குமரன் இயக்கவிருக்கிறார். 

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த 'லிங்கா' படத்தின் கதையை இயக்குநர் பொன் குமரன் தான் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரியாமணி நடிப்பில் உருவான 'சாருலதா' என்ற படத்தை பொன் குமரன் இயக்கியுள்ளார்.

கோல்மால் படத்தில் பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளளனர். நகைச்சுவை வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். சரவணன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, அருள் தேவ் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் ஜெயின் தயாரிக்கிறார். முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

SCROLL FOR NEXT