முதல்வர் ஸ்டாலின் 
செய்திகள்

பால்கே விருது: ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மத்திய அரசின் 2019-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

மத்திய அரசின் 2019-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில்,

திரைத் துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்!

திரைவானின் சூரியன் ரஜினி, தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!

நேசத்துடன் திரைக்கலையைப் போற்றி தரமான படங்கள் வழியே நம் நெஞ்சகங்களில் இடம்பிடித்து, இப்போது தேசிய திரைப்பட விருதுகள் பெறும் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, தனுஷ், ஆர்.பார்த்திபன், இமான் மற்றும் விஷால் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT