செய்திகள்

தனுஷ் படத்தில் இருந்து விலகிய இயக்குநர் ? தயாரிப்பாளரின் அறிவிப்பால் ரசிகர்கள் கேள்வி

DIN

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் மூலம் கவனம் பெற்ற ராம்குமார் தனது குறும்படத்தை முண்டாசுப்பட்டி என்ற பெயரில் திரைப்படமாக இயக்கினார். சி.வி.குமார் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். 

விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற முண்டாசுபட்டி திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் முண்டாசுப்பட்டி திரைப்படம், சிறிய முதலீட்டில் உருவாகும் படங்களின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து சுமார் 4 வருடங்களுக்குப் பிறகு ராம் குமார் இயக்கிய 'ராட்சசன்' படத்தில் தனது வித்தியாசமான திரை மொழியின் மூலம் கவனம் ஈர்த்தார். 

உலக அளவில் திரைப்படங்களை மதிப்பிடும் ஐஎம்டிபி தளம் ராட்சசன் படத்துக்கு 8.5 புள்ளிகளை வழங்கி கௌரவித்தது. அந்தப் படம் அவரை தமிழில் முன்னணி இயக்குநராக உயர்த்தியது. ராட்சசன் படத்துக்குப் பிறகு நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தை ராம் குமார் இயக்குவார் என்ற அறிவிப்பு வெளியானது சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கும் என்று கூறப்பட்டது. 

இந்த நிலையில் தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ராம் குமாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, எங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த விஷ்ணு விஷால் முண்டாசுப்பட்டி 2 ? எடுடா அந்த கேமராவ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தை ராம் குமார் இயக்குவார் என்று கூறப்படுகிறது. 

ஒருவேளை தனுஷுக்கு ராம் குமாரின் கதை பிடிக்காததன் காரணமாக அந்தக் கதையில் விஷ்ணு விஷால் நடிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தனுஷ் அடுத்தடுத்து படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருவதால் அவரால் ராம் குமார் படத்துக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இதனால் ராம் குமார் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தை முதலில் இயக்கிவிட்டு பின்னர் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT