செய்திகள்

அட்லி - ஷாரூக்கான் படத்தில் இணைந்த மற்றொரு தமிழ் கதாநாயகி

இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் புனேவில் துவங்கியுள்ளது. 

DIN

இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் புனேவில் துவங்கியுள்ளது. 

அட்லி இயக்கும் ஹிந்தி படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், நடிகை சான்யா மல்ஹோத்ரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

'மெர்சல்' மற்றும் 'பிகில்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று(வெள்ளிக்கிழமை) துவங்கியது. இதற்காக இயக்குநர் அட்லி உள்ளிட்ட படக்குழுவினர் புனேவில் இருக்கின்றனர். 

தற்போது புனே மெட்ரோ ரயில் நிலையத்தில் இநத்ப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில ரசிகர்கள் புகைப்படம் பகிர்ந்து வருகின்றனர்.

அதில் அட்லி படப்பிடிப்புத் தளத்தில் தான் எடுக்கவிருக்கும் காட்சியை விளக்கிக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இன்று நடிக்கும் படப்பிடிப்பில் நடிகை பிரியாமணியும் இணைந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT