சமீபத்தில் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் கடைசிப்படமான 'லாபம்' திரைப்படத்தின் டிரைலர் வெள்ளிக்கிழமை வெளியானது.
இயற்கை, புறம்போக்கு எனும் பொதுவுடமை, ஈ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ஜனநாதன். அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் லாபம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷ்ருதி ஹாசன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை 7C என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதையும் படிக்க | இளையராஜா இசையமைக்கும் படத்தில் 12 பாடல்கள்!
லாபம் திரைப்படத்தின் இயக்குநர் ஜனநாதன் சமீபத்தில் மரணம் மற்றும் கரோனா சூழல் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் நீண்ட முயற்சிக்கு பின் லாபம் திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் லாபம் திரைப்படம் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க | இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப்பதிவு : ரசிகர்கள் அதிர்ச்சி
இந்நிலையில் லாபம் திரைப்படத்தின் டிரைலர் வெள்ளிக்கிழமை வெளியானது. நடிகர் விஜய்சேதுபதி டிரைலரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இடதுசாரி கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.