செய்திகள்

சன் டிவி 'தாலாட்டு' தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய நடிகர் : புதிய நடிகர் யார் தெரியுமா ?

சன் டிவி தாலாட்டு தொடரில் இருந்து நடிகர் ரிஷிகேஷ் விலகியுள்ள, நிலையில் அவருக்க பதிலாக பொள்ளாச்சி பாபு நடிக்கிறார். 

DIN

சன் டிவி தாலாட்டு தொடரில் இருந்து நடிகர் ரிஷிகேஷ் விலகியுள்ள, நிலையில் அவருக்க பதிலாக பொள்ளாச்சி பாபு நடிக்கிறார். 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு தொடர் சமீபத்தில் 100 நாளை நிறைவு செய்தது. இந்தத் தொடரில் தென்றல் என்ற தொடர் மூலம் பிரபலமான ஸ்ருதி ராஜ் மற்றும் தெய்வமகள் மூலம் பிரபலமான கிருஷ்ணா இணைந்து இந்தத் தொடரில் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர்.

இந்தத் தொடர் பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் கிருஷ்ணாவின் அப்பாவாக நடிப்பவர் ரிஷிகேஷ். பல வருடங்களாக ரிஷி சன் டிவி தொடர்களில் நடித்து வருகிறார். 

மேலும் தற்போது விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதிக்கு அப்பாவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தத் தொடரில் இருந்து ரிஷி விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக பொள்ளாச்சி பாபு என்பவர் நடிக்கிறார். பொள்ளாச்சி பாபு தங்கம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT