செய்திகள்

''துபை குறுக்குச் சந்துல இருந்து பேசுறேன்... நீங்க இல்லாம...'' - நடிகர் வடிவேலுவுக்கு இயக்குநர் சேரன் வாழ்த்து

வெற்றிக்கொடிகட்டு பட நகைச்சுவைக் காட்சியை நினைவுபடுத்தும் விதமாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் வடிவேலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். 

DIN

வெற்றிக்கொடிகட்டு பட நகைச்சுவைக் காட்சியை நினைவுபடுத்தும் விதமாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் வடிவேலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். 

'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படத் தயாரிப்பு தரப்புக்கும், நடிகர் வடிவேலுவுக்கும் இடையே உருவான பிரச்னையின் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு படங்களில் நடிக்க தடை விதித்தது. 

இந்தத் தடையின் காரணமாக அவர் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இருப்பினும் அவரது நகைச்சுவைக் காட்சிகள் இடம் பெறாத தொலைக்காட்சிகளே இல்லை எனலாம். மேலும் சமூக வலைதளங்களில் எந்தப் பிரச்னை என்றாலும், அவரது காமெடியை அடிப்படையாக வைத்தே மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டன. 

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு விதித்திருந்த தடையை சமீபத்தில் நீக்கியது. இதனையடுத்து அவர் சுராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ''நாய் சேகர்' என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

நடிகர் வடிவேலுவுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் அவருக்கு ஹேஷ்டேக் உருவாக்கி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரபலங்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகின்றனர். 

அந்த வகையில் இயக்குநரும், நடிகருமான சேரன் தனது 'வெற்றிக்கொடிகட்டு' பட நகைச்சுவைக் காட்சியை நினைவுபடுத்தும் விதமாக, ''பிறந்தநாள் வாழ்த்துகள் வடிவேலு அய்யா. நம்பர் 6 விவேகானந்தர் தெரு, துபை குறுக்குச்சந்தல இருந்து பேசுறேன். நீங்க மறுபடிக்கு துபைக்கு வந்தது சந்தோஷம்யா வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபை ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா. காமெடில நீங்க எப்பவுமே கிங் என்று ட்வீட் செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் உயிரிழப்பு

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 47,525 போ் பயன்

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை எதிா்த்தது ஆா்எஸ்எஸ்: காங்கிரஸ்

ராமநாதபுரம் அருகே திமுக பிரமுகா் வீடு மீது பெட்ரோல் குண்டுவீச்சு

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் 160 இடங்களில் வெற்றிக்கு உதவுவதாக அணுகிய இருவா்: சரத் பவாா் கருத்தால் பரபரப்பு

SCROLL FOR NEXT