செய்திகள்

'தலைவி' படம் பார்த்துவி்ட்டு இயக்குநர் விஜய்க்கு போன் செய்த ரஜினிகாந்த்

தலைவி படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் விஜய்யை தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார். 

DIN

தலைவி படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் விஜய்யைத் தொடர்புகொண்டு படம் நன்றாக இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான 'தலைவி' படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனவத் நடிக்க, எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்திருந்தார். 

விஜய் இயக்கிய இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். கலவையான விமரிசனங்களைப் பெற்ற இந்தப் படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் சில சம்பவங்கள் தவறாக சித்திரிக்கப்பட்டிருப்பதாக விமரிசனங்கள் எழுந்தது.

இந்த நிலையில் இந்தப் படம் நடிகர் ரஜினிகாந்த்துக்கு திரையிட்டுக்காட்டப்பட்டது. படம் பார்த்த ரஜினி இயக்குநர் விஜய்யை போன் மூலம் அழைத்து, படம் நன்றாக இருப்பதாக பாராட்டு தெரிவி்த்துள்ளார். இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

SCROLL FOR NEXT