அட்லி 
செய்திகள்

ஷாருக்கான் - அட்லி படப்பெயர்: வெளியான தகவல்

ஷாருக் கான் நடிக்கும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் பற்றிய...

DIN

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி அடுத்ததாக ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார். 

ஷாருக் கான் நடிக்கும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் பற்றிய அதிகாரபூர்வத் தகவல் இதுவரை வெளியாகவில்லை. 

புணேவில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக மெட்ரோ ரயில் நிலையத்தில் வண்டிகளை நிறுத்துவதற்காக அனுமதி கேட்டு வழங்கப்பட்ட கடிதம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் படத்தின் தலைப்பு லயன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஷாருக் கான் - அட்லி இணையும் படத்துக்கு லயன் என்கிற தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

ஷாருக் கான் - அட்லி படம் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT