செய்திகள்

அடுத்தடுத்து 3 படங்களில் நடித்துள்ள 'பாரதி கண்ணம்மா' நடிகர்: ரசிகர்கள் மகிழ்ச்சி

பாரதி கண்ணம்மா புகழ் அகிலன் தற்போது 3 படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். 

DIN

பாரதி கண்ணம்மா புகழ் அகிலன் தற்போது 3 படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். 

சின்னத்திரையில் இருந்து எண்ணற்றவர்கள் வெள்ளித்திரைக்கு சென்றிருந்தாலும், அவர்களில் வெற்றி பெற்றவர்கள் மிக மிக குறைவு. கடந்த சில வருடங்களாக இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சமீப காலமாக சமூக வலைதளங்களில் சின்னத்திரைக்கும், திரைப்படங்களுக்கு நிகரான ஆதரவு கிடைத்து வருவதே இதற்கு காரணம். 

இந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து அகிலன் விலகினார். அகிலன் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்தது. அகிலன் வேடத்தில் தற்போது சுகேஷ் என்பவர் நடித்து வருகிறார். 

அகிலன் தற்போது பிரபு தேவாவுடன் இணைந்து பகீரா, விஷாலுடன் இணைந்து வீரமே வாகை சூடும், பீட்சா 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து திரைப்பட வாயப்புகள் வருவதால் அவரால் பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT