செய்திகள்

பீஸ்ட் உடன் மோதும் வலிமை : வெளியீட்டுத் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்

DIN


'வலிமை' படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். 

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்க, நீரவ் ஷா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. 

முதலில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படமும் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரும் என கூறப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த ஜில்லா திரைப்படமும், நடிகர் அஜித் நடித்த வீரம் திரைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் அஜித் படங்கள் இணைந்து வெளியாகவுள்ளதால் ரசிகர்களுக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் எனப்படும் முன்னோட்ட விடியோ நாளை வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT