செய்திகள்

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 'தலைவி' இரண்டாம் பாகம் ?

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தலைவி இரண்டாம் பாகம் எடுக்க நடிகை கங்கனாவுடன் இணைந்து இயக்குநர் விஜய் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தலைவி இரண்டாம் பாகம் எடுக்க நடிகை கங்கனாவுடன் இணைந்து இயக்குநர் விஜய் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான 'தலைவி' படம் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

விஜய் இயக்கத்த்தில் உருவாகிய இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் கங்கனாவும், எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். 

இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை மட்டுமே பிராதானமாக காட்டப்பட்டிருக்கும். இந்த நிலையில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ,தலைவி, படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அதற்காக நடிகை கங்கனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT