செய்திகள்

சொந்தமாக திரையரங்கம் திறந்த பிரபல கதாநாயகன்

DIN

பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா தன் சொந்தத் திரையரங்கை திறந்து வைத்திருக்கிறார்.

‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் வெளியான அப்படம் தமிழ் , ஹிந்தி என சில மொழிகளில் ரீமேக் ஆனது. இருந்தாலும் விஜய் -க்கு கிடைத்த வரவேற்பு பிற எந்த நடிகருக்கும் கிடைக்கவில்லை. 

அதற்கடுத்து ‘கீதா கோவிந்தம்’ ‘டியர் காம்ரேட்’ போன்ற படங்களில் நடித்து தெலுங்கின் தவிர்க்க முடியாத நடிகரானார். தமிழிலும் ‘நோட்டா’படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டார்.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் சொந்தமாக திரையரங்கம் ஒன்றைக் கட்டி வந்தார்.’ஏவிடி சினிமாஸ்’ எனப் பெயரிடப்பட்ட இந்தத் திரையரங்கத்தைக் கடந்த செப்-18 ஆம் தேதி திறந்து வைத்தார். தற்போது அந்தத் திரையரங்கில் நாக சைதன்யா , சாய் பல்லவி நடித்த ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் நாளை(செப்-24) வெளியாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைப்பு வழங்காமலே 4ஆயிரம் பேரிடம் குடிநீா் வரி வசூலிப்பு!

செம்பட்டி அருகே ரூ.98 கோடியில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி

கொடைக்கானலில் வெப்ப நிலை அதிகரிப்பு தடுக்கப்படுமா?

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT