செய்திகள்

பிரபல கதாநாயகன் படத்தில் இணையும் மைக் டைசன்: உற்சாகத்தில் ரசிகர்கள்

பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் லைகர் படத்தில் நடிக்கிறார்.

DIN


பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் லைகர் படத்தில் நடிக்கிறார்.

அர்ஜூன் ரெட்டி, டியர் காம்ரேட் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு  அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது அவர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் லைகர் படத்தில நடித்து வருகிறார். இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

இந்தப் படத்துக்கு மணிசர்மா பின்னணி இசையமைக்க, தனிஷ்க் பக்சி பாடல்களுக்கு இசையமைக்கிறார்.  இந்தப் படத்தை தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் பூரி கணெக்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இணைந்துள்ளார். இதுகுறித்து இந்தப் படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்தப் பதவில், குத்துச்சண்டை விளையாட்டின் கடவுள், சிறந்தவர் மைக் டைசன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அதுவும் இந்தியாவிலேயே முதன்முறையாக லைகர் படத்தில் இணைந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT