சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்றார் ஸ்ரீதர் சேனா 
செய்திகள்

சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்றார் ஸ்ரீதர் சேனா

சூப்பர் சிங்கர் 8 இறுதிச் சுற்றில் போட்டியிட்ட ஸ்ரீதர் சேனா, முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

DIN

சூப்பர் சிங்கர் 8 இறுதிச் சுற்றில் போட்டியிட்ட ஸ்ரீதர் சேனா, முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

விஜய் டிவியில் 2006ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஜூனியர், சீனியர் என இரு பிரிவுகளில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 8 ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனின் இறுதிப் போட்டியில் நேற்று முத்து சிற்பி, பரத், அனு ஆனந்த், அபிலாஷ், ஸ்ரீதர் சேனா, மானசி ஆகிய 6 பேர் போட்டியிட்டனர்.

இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இசையமைப்பாளர்கள் அனிருத், சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் மாணிக்கம் விநாயகம், சித்ரா, பென்னி தயால், எஸ்.பி.பி.சரண், உன்னி கிருஷ்ணன், அனுராதா உள்ளிட்டோர் முன்பு 6 போட்டியாளர்கள் பாடினார்கள்.

இதில் நடுவர்கள் முடிவு மற்றும் மக்களின் வாக்குகள் அடிப்படையில், முதலிடத்தை ஸ்ரீதர் சேனா(ரூ. 10 லட்சம்), இரண்டாம் இடத்தை பரத்(ரூ. 3.5 லட்சம்), மூன்றாம் இடத்தை அபிலாஷ்(ரூ. 2 லட்சம்) வென்றனர். மேலும், மாற்றத்திற்கான போட்டியாளர் என்ற விருதை முத்து சிற்பி(ரூ. 1 லட்சம்) பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்தில் தோ் பவனி

ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு

மாதிரிப் பள்ளி மாணவா்கள் மரணம் குறித்து துறை ரீதியான விசாரணை

வேலை செய்த வீட்டில் 6 பவுன் நகையை திருடிய பெண் கைது

SCROLL FOR NEXT