செய்திகள்

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

படப்பிடிப்புத் தளத்தில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

DIN

படப்பிடிப்புத் தளத்தில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

லத்திகா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். அந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார். குறிப்பாக சந்தானத்துடன் அவர் இணைந்து நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

அந்தப் படத்துக்கு பிறகு பவர் ஸ்டாருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. கடைசியாக கேப்மாரி என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தையடுத்து தற்போது வனிதா விஜயகுமாருடன் இணைந்து பிக்கப் டிராப் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதுகு வலியின் காரணமாகவும் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!

SCROLL FOR NEXT