முகப்பு
செய்திகள்

வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் - 'சார்பட்டா' துஷாரா: முதல் பார்வை போஸ்டர் குறித்த தகவல்

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெயில் படத்துக்குப் பிறகு இயக்குநர் வசந்த பாலன் இயக்கும் படத்தில் அர்ஜூன் தாஸ், 'சார்பட்டா பரம்பரை' புகழ் துஷாரா விஜயன் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் 'நேர்கொண்ட பார்வை' வில்லன் அர்ஜூன் சிதம்பரம், ஜேஎஸ்கே சதிஷ்குமார், ஷா ரா, பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, வனிதா விஜயகுமார், பவா லட்சுமணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தை அர்பன் பாய்ஸ் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments