படம் - twitter.com/iamRashmika/ 
செய்திகள்

நடிகை ராஷ்மிகா மந்தனா பிறந்த நாள்: ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற பாடல்கள் (விடியோக்கள்)

ஒரே படத்தில், ஒரே பாடலில் அகில இந்தியப் புகழ்.

DIN

சாமீய்.. சாமீய்... என புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனை ஏங்கிப் பாடும் முன்பு வரை ராஷ்மிகா மந்தனா, பிரபல தென்னிந்திய நடிகையாக மட்டுமே இருந்தார். புஷ்பா படமும் அதன் பாடல்களும் இன்று ராஷ்மிகாவை இந்திய அளவுக்குக் கொண்டு சேர்த்துவிட்டது. மிஷன் மஞ்சு என்கிற ஹிந்திப் படத்தில் கதாநாயகியாக நடித்து விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். குட்பை என்கிற இன்னொரு ஹிந்திப் படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டியின் அடுத்த படத்தில் ரன்பீர் கபூரும் ராஷ்மிகாவும் நடிக்கிறார்கள். ஒரே படத்தில், ஒரே பாடலில் அகில இந்தியப் புகழ்.

20 வயதில், 2016-ல் கிரிக் பார்ட்டி என்கிற கன்னடப் படத்தில் நடிகையாக அறிமுகமானார். முதலில் நடித்த மூன்றும் கன்னடப் படங்கள். 2018 முதல் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் என்கிற தெலுங்குப் படத்தில் நடித்தார் ராஷ்மிகா. அந்தப் படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் காவாலா என்கிற ஒரே பாடல் ராஷ்மிகாவின் அடையாளமாக மாறிப் போனது. 

கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ள ராஷ்மிகா, கார்த்தியுடன் இணைந்து சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

இன்று பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார் ராஷ்மிகா. இதுவரை அவர் நடித்துள்ள படங்களில் அதிக வரவேற்பு பெற்ற பாடல்களின் விடியோக்கள்: 

சாமி சாமி (புஷ்பா)

பெலகெட்டு (கிரிக் பார்ட்டி)

இன்கேம் இன்கேம் (கீதா கோவிந்தம்)

வச்சிந்தம்மா (கீதா கோவிந்தம்)

மைண்ட் பிளாக் (சரிலேரு நீக்கெவரு)

ஹீ ஈஸ் சோ கியூட் (சரிலேரு நீக்கெவரு)  

டாப் டக்கர் (யுவன் சங்கர் ராஜா இசையமைத்த ஆல்பம்)

சந்தா சந்தா (அஞ்சனி புத்ரா) 

ஓ மை ஆத்யா (Aadavallu Meeku Joharlu)

யாரையும் இவ்ளோ அழகா (சுல்தான்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT