முகப்பு
செய்திகள்

’ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூல்?

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் வசூல் ரூ.1,000 கோடியை நெருங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 8 ஏப்ரல், 2022 at 1:17 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:25 PM

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் வசூல் ரூ.1,000 கோடியை நெருங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜுனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அதன் உருவாக்கத்திலும் வணிக ரீதியிலும் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது.

முன்னதாக, இத்திரைப்படம் வெளியான முதல் நாள் ரூ.223 கோடி வசூலித்தாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.மேலும் பாகுபலியின் வசூலை முறியடிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது உலக அளவில் இப்படம் ரூ.1,000 கோடி வசூலை நெருங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

இதன் மூலம், 'ஆர்ஆர்ஆர்' இந்திய சினிமாவில் அதிகபட்ச முதல் நாள் வசூல் பட்டியிலில் முதலிடத்தையும் ரூ.1,000 கோடியை நெருங்கும் முதல் தென்னிந்தியத் திரைப்படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.