செய்திகள்

இந்தியாவில் அதிகமாக வசூலித்த 3-வது ஹிந்திப் படம்: கேஜிஎஃப் 2 சாதனை

நேற்று வரை ரூ. 343 கோடி வசூலித்துள்ள கேஜிஎஃப் 2 (ஹிந்தி) படம் ஆமிர் கானின் டங்கல் படம் வசூலை...

DIN

இந்தியாவில் அதிகமாக வசூலித்த 3-வது ஹிந்திப் படம் என்கிற சாதனையை கேஜிஎஃப் 2 படம் நிகழ்த்தியுள்ளது. 

யஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். கேஜிஎஃப் 2 படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

கேஜிஎஃப் 2 படம் முதல் நாளன்று ரூ. 134.5 கோடி வசூலித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. 

இதன் ஹிந்திப் பதிப்பு தற்போது புதிய சாதனையைப் படைத்து வருகிறது. இதற்கு முன்பு 2019-ல் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கிய வார் படம், முதல் நாளன்று ரூ. 51.60 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது. கேஜிஎஃப் 2 ஹிந்திப் பதிப்பு அதன் சாதனையை உடைத்து முதல் நாளன்று ரூ. 53.95 கோடி வசூலித்து புதிய வரலாறு படைத்தது. 

கேஜிஎஃப் 2 (ஹிந்தி) ஐந்து நாள்களில் ரூ. 200 கோடி வசூலைத் தாண்டியது. பாகுபலி 2 (ஹிந்தி) படம் ஆறாவது நாளன்று தான் இந்தியாவில் இந்த இலக்கை எட்டியது. 

தற்போது இந்தியாவில் அதிகமாக வசூலித்த 3-வது ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. நேற்று இந்தியாவில் ரூ. 6.25 கோடி வசூலித்துள்ளது. இதுவரை இந்தியாவில் இதன் வசூல் - ரூ. 343 கோடி. இதனால் டைகர் ஜிந்தா ஹை, பிகே, சஞ்சு படங்களின் வசூலைத் தற்போது தாண்டியுள்ளது. 

கேஜிஎஃப் 2 (ஹிந்தி): இந்திய வசூல்

2-வது நாள்: ரூ. 100 கோடி
4-வது நாள்: ரூ. 150 கோடி 
5-வது நாள்: ரூ. 200 கோடி 
7-வது நாள்: ரூ. 250 கோடி 
11-வது நாள்: ரூ. 300 கோடி 

ஹிந்திப் படங்களில் ரூ. 300 கோடி வசூலை எட்டிய படங்கள்: பிகே, பஜ்ரங்பைஜன், சுல்தான், டங்கல், டைகர் ஹிந்தா ஹை, பாகுபலி 2 , பத்மாவத், சஞ்சு, வார், கேஜிஎஃப் 2. இந்தப் படங்களில் ரூ. 400 கோடி மற்றும் ரூ. 500 கோடி வசூலைத் தாண்டிய ஒரே படம் - பாகுபலி 2 (ஹிந்தி) மட்டுமே. 

2019-க்குப் பிறகு (வார் படம்) ரூ. 300 கோடியை இந்தியாவில் வசூலித்த முதல் ஹிந்திப் படம் என்கிற பெருமையையும் கேஜிஎஃப் 2  பெற்றுள்ளது. 

நேற்று வரை ரூ. 343 கோடி வசூலித்துள்ள கேஜிஎஃப் 2 (ஹிந்தி) படம் ஆமிர் கானின் டங்கல் படம் வசூலை (ரூ. 387.38 கோடி) முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அது நிகழும்போது, இந்தியாவில் அதிக வசூலைக் கண்ட ஹிந்திப் படங்களில் முதல் இரு படங்களாக பாகுபலி 2, கேஜிஎஃப் 2 என இரு தென்னிந்தியப் படங்களே இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

8 வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைக்கும் திட்டம் இல்லை! - மத்திய அரசு

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புயல் சின்னம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சென்னை அருகே நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! கல்பாக்கம் அருகே கரையைக் கடக்கும்!

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்... பயணிகள் சிக்கித் தவிப்பு!

SCROLL FOR NEXT