செய்திகள்

உருவாகிறது ஜிகர்தண்டா இரண்டாம் பாகம் - விடியோவுடன் அறிவிப்பு வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

DIN

ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்தப் படம் தொடர்பாக கார்த்திக் சுப்புராஜை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பாராட்டிய இயக்குநர் ரஜினிகாந்த், பாபி சிம்ஹா வேடத்துக்கு தன்னை அழுகியிருந்தால் தான் நடித்திரருப்பேன் என்று சொன்னாராம். அந்த அளவுக்கு நடிகர் ரஜினிகாந்த்துக்கு மட்டுமல்ல, ரசிகர்களிடமும் பாபி சிம்ஹா கதாப்பாததிரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்த்தை வைத்து பேட்ட படத்தை இயக்கினார் என்பது வரலாறு.

இந்தப் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். இந்த நிலையில் இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும், தற்போது அதற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் படத்தில் யார், யார் நடிக்கிறார்கள், தயாரிப்பாளர் யார் என்ற விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மகான் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ஜிகர்தண்டா படத்துக்கு கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதை எழுதியுள்ளார். 

ஜிகர்தண்டா திரைப்படம் தெலுங்கில் கட்டலகொண்டா கணேஷ் என்ற பெயரில் தெலுங்கிலும், பச்சன் பாண்டே என்ற பெயரில் ஹிந்தியிலும் ஜிகர்தண்டா என்ற பெயரில் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதியவரிடம் ரூ.73.50 லட்சம் மோசடி

ஜெயப்பிரியா கல்விக்குழுமப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஜான்டூயி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

நாட்டு வெடி பதுக்கியவா் கைது

நாளை ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி

SCROLL FOR NEXT