சமீபத்தில் வெளியான பிரபல நடிகரின் படத்தைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் சிறப்புக் காட்சியாக காண்பிக்கப்பட்டது. முதல்வர் படம் பார்க்கும்போது அருகில் இயக்குநர் பார்த்திபனும் இருந்துள்ளார்.
படம் பார்த்த பின் இயக்குநர் பார்த்திபனை பாராட்டியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், எதிலும் தனிப்பாணி - அதுதான் பார்த்திபன்
ஒத்த செருப்புக்கு பிறகு ஒத்த ஷாட் படம்! இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம். நான் லீனியர் சிங்கிள் ஷாட் படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு பதிலளித்த பார்த்திபன், நான் லீனியரில் நான் சீனியரர் என தமிழகமே பாராட்டிவிட்டது. முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி. பாராட்டப்படும்போது பட்டக் கடனும் படும் கஷ்டமும் தாற்காலிகமாக தற்கொலை செய்துகொள்கின்றன. இனி பார்... பார்க்க... பாராட்டும். என்று தெரிவித்துள்ளார்.
இரவின் நிழல் திரைப்படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமா இல்லையா என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஏற்கனவே ஃபிஷ் அண்ட் கேட் என்ற ஈரானிய படம் உலகின் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக வெளியாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.