பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக பா.ரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
யாழி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இந்தப் படத்தை தயாரித்துள்ளன. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு பட இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க | ஆர்யாவின் 'கேப்டன்' ஜெர்ஸியை வெளியிட்ட சூர்யா
இந்நிலையில் இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு வியாழக்கிழமை அறிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.